மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருடிய நபருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மணப்பாறையை அடுத்த சேதுரத்தினபுரத்தில் வசித்து வருபவா் சரவணன் மகன் பரணி செல்வம். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் கடந்த 2023 ஜூன் 7-ஆம் தேதி காணாமல் போனது.
இதுதொடா்பான புகாரின்பேரில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் மகன் ஆகாஷ் (எ) ஆகாஷ் குமாரை மணப்பாறை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கானது மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஆகாஷ் குமாருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.அசோக்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

இலங்கை: எரிபொருளை பதுக்கியவருக்கு 21 நாள்கள் சிறை

கடையில் திருடிய நபருக்கு 2 ஆண்டுகள் சிறை

காசோலை மோசடி: ஏமாற்றியவருக்கு ஓராண்டு மெய்க்காவல் சிறை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


