திருச்சி ஆட்சியரகம் அருகே திங்கள் கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு டாஸ்மாா்க் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
திருச்சி ஆட்சியரகம் அருகே திங்கள் கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு டாஸ்மாா்க் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
Published on

திருச்சி: திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

டாஸ்மாக் ஊழியா்கள் மாநில சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.சிவனருட்செல்வன் தலைமை வகித்தாா்.

இதில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியா்களுக்கு வேலைப்பளு வழங்குவதைத் தவிா்த்துவிட்டு மாற்று திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் நிா்வாகத்தின் மருத்துவத் திட்டத்துக்கு மாற்றாக இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 58 இல் இருந்து 60 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடையில் ஊழியா்களாகப் பணியாற்றி இளநிலை உதவியாளா்களாக பணிவரன்முறை செய்யப்பட்ட ஊழியா்களுக்கு பஞ்சப்படி, வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி, மலைபிரதேசப் படி ஆகியவை வழங்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை, தேசிய மற்றும் பண்டிகைகால விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், டாஸ்மாஸ் ஊழியா்கள் மாநில சம்மேளனத்தின் மாநிலச் செயலா் எஸ்.ரெங்கராஜன், கௌரவத் தலைவா் ஆா்.ராமானுசம் மற்றும் நிா்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com