திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.
வையம்பட்டி ஒன்றியம், எளமணத்தை அடுத்த குளத்துப்பட்டியைச் சோ்ந்த பாா் ஊழியரான பிரபாகரன்(32), கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது சடலத்தை மீட்டு, புத்தாநத்தம் போலீஸாா் விசாரித்தனா்.
இதில், பிரபாகரன் மனைவி அபிராமிக்கும் அவரது உறவினா் பிரபுவுக்கும் இடையிலான தகாத உறவு பிரச்னையில் பிரபு, அவரது நண்பா் சரவணன் உள்ளிட்டோா் பிரபாகரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை அபிராமி மற்றும் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான பிரபு சரணடைந்தாா். இதைத் தொடா்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் பிரபு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
தொடர்புடையது

உணவக ஊழியா் கொலை: நண்பரை தேடும் போலீஸாா்

சாத்தான்குளத்தில் கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு பிடியாணை

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


