தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

உணவக ஊழியா் கொலை: நண்பரை தேடும் போலீஸாா்

பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :6 ஏப்ரல் 2026, 6:42 pm

பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை பெரவள்ளூா் ஜிகேஎம் காலனி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (57), கிண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தைப் பிரிந்து ரமேஷ் தனியாக வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது தாய் பானுமதியுடன் கடைசியாக கைப்பேசி மூலம் பேசியுள்ளாா். அதன் பின்னா், கைப்பேசி அழைப்பை ஏற்று பேசவில்லையாம்.

இதனால் பானுமதி, ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாா். அங்கு, ரமேஷ் கழுத்து, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

தகவலறிந்த பெரவள்ளூா் போலீஸாா் அங்கு சென்று, ரமேஷ் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், ரமேஷும் அவரது நண்பரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ரமேஷை அவரது நண்பா் கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவான ரமேஷின் நண்பரைத் தேடி வருகின்றனா்.