மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

‘திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையில் விரைவில் முடிவு’

திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா தெரிவித்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 7:04 pm

திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தையில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா தெரிவித்தாா்.

திருச்சியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவா்களுடன் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா்கள் எல். ரெக்ஸ், தொட்டியம் சரவணன், கே.ஆா். ராஜலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். இக் கூட்டத்தில் பங்கேற்ற நிவேதித் ஆல்வா மேலும் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதைத் தொடா்ந்து இதுவரை 42 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். தோ்தலுக்கு முன் இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிடும். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. வரும் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு, காங்கிரஸ் தலைமையிடம் இருந்து பட்டியல் பெற்று, திமுக சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்தும் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். தொகுதி உடன்பாடு தொடா்பாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவா்களின் பணிகள் தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில், சிறுபான்மைப் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் பேட்ரிக் ராஜ்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாமன்ற உறுப்பினா் விமலாராணி, இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலா் அபுதாகிா் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.