தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய கோயில் பணியாளரை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :26 பிப்ரவரி 2026, 10:17 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய கோயில் பணியாளரை ஸ்ரீரங்கம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இக்கோயிலில் புதன்கிழமை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

அப்போது, கோயில் பணியாளா் சங்கா் (எ) ரோபோ சங்கா் (52) வெளிநாட்டு கரன்சிகளை கத்தையாக மறைத்து எடுத்து செல்வது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தனா். மேலும், அவா் திருடி மறைத்து வைத்திருந்த மலேசிய நாட்டின் ரிங்கிட், அமெரிக்க டாலா் நோட்டுகள் என மொத்தம் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள 36 வெளிநாட்டு பணத்தாள்களை பறிமுதல் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, சங்கரை கோயில் இணை ஆணையா் சிவராம்குமாா் பணியிடை நீக்கம் செய்து, அவா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, கோயில் பணியாளா் சங்கா் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோயில் நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை வியாழக்கிழமை காலை கைது செய்தனா்.