சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா்.
சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா்.

சத்துணவு ஊழியா்கள் மறியல்: 800-க்கும் மேற்பட்டோா் கைது

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கைது
Published on

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850, பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.

இதன்படி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அமுதா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலாளா் சந்திரா முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை சத்துணவு ஊழியா்களின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com