ஆடுகளை வேட்டையாடியது நாய்கள்தான்: வனத்துறையினா்


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மா்ம விலங்குகள் கடித்து 47 ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தில் நாய்கள் கூட்டமாகவந்து கடித்துச்சென்றிருப்பதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பண்ணப்பட்டி ஊராட்சியில் கருப்புரெட்டியப்பட்டி காப்பு காடுகள் பகுதி அருகே 47 செம்மறி மற்றும் வெள்ளாடுகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது குறித்து சம்பவ இடத்தில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் கேமரா பொருத்தி கண்டறிய ஏற்பாடு செய்தனா்.
இதில் ஆடுகளின் உடல்களை நாய்கள் கூட்டம் மீண்டும் வந்து கடித்து தின்பது பதிவாகியிருந்தது. ஆடுகளை வேட்டையாடியது நாய்கள் கூட்டம் தான் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை கொள்ளப்படும் எனவும் வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...