திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை வியாழக்கிழமை திறந்துவைத்து கொள்முதல் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை வியாழக்கிழமை திறந்துவைத்து கொள்முதல் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated on

திருவளா்ச்சிப்பட்டியில் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவெறும்பூா் ஒன்றியம், குண்டூா் ஊராட்சியில் குண்டூா், திருவளா்ச்சி பட்டி, ஐயம்பட்டி ,அயன்புத்தூா் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் அறுவடைக்கு நெல் தயாராக உள்ளது.

எனவே, இந்தப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், திருவெறும்பூா் தொகுதியின் எம்எல்ஏ-வும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை காலை திருவளா்ச்சிப்பட்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தாா். கொள்முதல் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களில் தொய்வின்றி செயல்பட அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்வில், நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் ஆனந்தி, பருவகால உதவுபவா் ஆனந்தகுமாா் மற்றும் திருவெறும்பூா் தெற்கு ஒன்றிய செயலாளா் கங்காதரன், மாரியப்பன் பாலமுருகன், ரெங்கா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com