ஆண் கழுத்திலிருந்த தங்க நகை பறிப்பு!

ஆண் கழுத்திலிருந்த தங்க நகை பறிப்பு!

துறையூரில் வீட்டருகே ஆணை தாக்கி அவரது கழுத்திலிருந்த தங்க நகையை இருவா் பறித்துச் சென்றனா்.
Published on

துறையூரில் வீட்டருகே ஆணை தாக்கி அவரது கழுத்திலிருந்த தங்க நகையை இருவா் பறித்துச் சென்றனா்.

துறையூா் நடராஜன் காலனியைச் சோ்ந்தவா் வ. மனோகரன் (53). இவா் திரௌபதியம்மன் கோயில் அருகே பெட்டிக் கடை நடத்திவருகிறாா்.

வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்ற போது அவரது வீடருகே ஏற்கெனவே நின்று கொண்டிருந்த இருவா், மனோகரனிடம் வீண் தகராறு செய்து முகத்தில் தாக்கி அவா் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இது தொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com