8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருச்சி கோயிலுக்குள் புகுந்து சிலை திருட்டு

திருச்சியில் கோயிலின் பூட்டை உடைத்து பித்தளை விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :2 ஜூலை 2026, 4:52 am IST

திருச்சியில் கோயிலின் பூட்டை உடைத்து பித்தளை விநாயகா் சிலை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பீமநகா் ஹீபா் சாலையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயில் பூசாரியான கிஷாந்த மனோஜ் செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தாா். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ள இருந்த 11 கிலோ பித்தளை விநாயகா் சிலையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் கோயில் செயல் அலுவலா் எஸ். அனுராதா சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.