லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சியில் கிருஷ்ணன் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு!

திருச்சியில் கிருஷ்ணன் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருடு போனது தொடர்பாக...

Vinayagar idol stolen after lock of Krishna temple in Trichy ...

திருச்சி பீமநகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், விநாயகர் சிலையை திருடிச் சென்றனர். - டிஎன்எஸ்

Published On :1 ஜூலை 2026, 12:06 pm IST

திருச்சி: திருச்சி பீமநகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், விநாயகர் சிலையை திருடிச் சென்றனர்.

திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கோயில் அர்ச்சகர் கிஷாந்த் மனோஜ் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு, இரவு வழக்கம் போல கோயிலை பூட்டி விட்டுச் சென்றார். அதன்பின், புதன்கிழமை காலை கோயிலைத் திறந்து பார்த்தபோது, கருவறையில் இருந்த சுமார் 3 அடி உயரமுள்ள பிரதோஷ விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விநாயகர் சிலைத் திருட்டு தொடர்பாக கோயில் அர்ச்சகர் உடனடியாக அறநிலையத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் செங்குலத்தான், இதுதொடர்பாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கோயிலின் பூட்டை உடைத்துச் சிலை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Vinayagar idol stolen after lock of Krishna temple in Trichy is broken; police investigating

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.