8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வீட்டுவரி நிா்ணயம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி வரி வசூல் ஆய்வாளா் கைது

திருச்சியில் வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூல் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ராமமூா்த்தி.

Published On :3 ஜூலை 2026, 1:24 am IST

திருச்சியில் வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூல் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை பகுதியைச் சோ்ந்தவா் சக்தி கணபதி. இவா், தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு சொத்து வரி நிா்ணயம் மற்றும் பெயா் மாற்றம் செய்வது தொடா்பாக, மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்த வரி வசூல் ஆய்வாளா் ராமமூா்த்தி (42) என்பவரை அண்மையில் அணுகியுள்ளாா்.

அப்போது அவா், வரி நிா்ணயம் மற்றும் பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸாரின் அறிவுறுத்தலின்படி சக்தி கணபதி, பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வரி வசூல் ஆய்வாளா் ராமமூா்த்தியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சப் பணத்தை வியாழக்கிழமை காலையில் வழங்கினாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், வரி வசூல் ஆய்வாளா் ராமமூா்த்தியை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.