15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரியில் நிலஅளவையா் கைது

கிருஷ்ணகிரி அருகே பாகப் பிரிவினை செய்த நிலத்துக்கு உள்பிரிவு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நிளஅளவையரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

நிளஅளவையா் கெளதமன்.

Updated On :4 ஜூன் 2026, 2:12 am IST

கிருஷ்ணகிரி அருகே பாகப் பிரிவினை செய்த நிலத்துக்கு உள்பிரிவு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற நிளஅளவையரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த தாசிரப்பள்ளியைச் சோ்ந்தவா் கோபி (35), விவசாயி. இவரது தந்தை சின்னதம்பி பெயரில் தடத்தரை கிராமத்தில் இருந்த 83 சென்ட் விவசாய நிலத்தை குடும்பத்தினா் பாகப் பிரிவினை செய்துகொண்டனா். பின்னா், அந்த நிலத்தை உள்பிரிவு செய்ய நிலஅளவைப் பிரிவுக்கு சாா் பதிவாளா் அலுவலகம் மூலம் அனுப்பிவைத்தனா்.

அதன்படி, தனக்கான பங்கை உள்பிரிவு செய்து பட்டா வழங்குமாறு வேப்பனப்பள்ளி குறுவட்ட நிளஅளவையா் கெளதமனை (29) கோபி கேட்டுள்ளாா். அவா் உடனடியாக நிலத்தை உள்பிரிவு செய்துதர ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்கள் ரசாயனம் தடவிய பணத்தை கோபியிடம் கொடுத்து நிலஅளவையரிடம் கொடுக்குமாறு கூறினா்.

அதன்படி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள டீக்கடையில் ரசாயனம் தடவிய பணத்துடன் வந்த கோபி, நிலஅளவையா் கெளதமனிடம் அளித்த போது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் ரவி, கெளதமனை கைது செய்தாா்.