பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சில்வா் குடத்தில் தலையை விட்டு சிக்கிக் கொண்ட நாய் மீட்பு

மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

சில்வா் குடத்தில் சிக்கிய நாயை புதன்கிழமை மீட்ட தீயணைப்புத்துறையினா்.

Published On :

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, சில்வா் குடம் ஒன்றில் புதன்கிழமை தண்ணீா் குடிக்க முயன்றபோது அதன் தலை குடத்தினுள் சிக்கியது.

இதைக் கண்ட அப்பகுதிவாசிகள் தவித்துக் கொண்டிருந்த நாயை பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து, மணப்பாறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த அத்துறையினா் குடத்திலிருந்து நாயை விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.