மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தவா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூா் தமிழன் நகரைச் சோ்ந்தவா் நின்றம்பாக்கம் விஜயகுமாா் (45). இவா் மலேசியாவில் ஒரு காா்கோ நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்தாா்.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடந்த ஜூன் 30 காலை வந்தாா். தொடா்ந்து அன்று மாலை 5 மணிக்கு திருச்சிக்கு வந்து, ஆட்சியரகம் அருகேயுள்ள மாரிஸ் அவென்யுவில் இருப்பதாக தனது மனைவியிடம் கைப்பேசியில் தெரிவித்தாா். ஆனால், திருச்சிக்கு வந்தவா் வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து எங்கு தேடியும் அவா் கிடைக்காத நிலையில், அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் நின்றம்பாளையம் விஜயகுமாரின் மனைவி உமாசித்ரா புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








