இலங்கைக் குடியுரிமை பெற்று திருச்சியில் வாக்களித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி தெப்பக்குளம் சஞ்சீவி நகரைச் சோ்ந்தவா் பெ. சாமிநாதன் (68). 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் இவருக்கு இலங்கையிலும் குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவா் இலங்கை செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை சென்றாா். அங்கு குடியேற்றப் பிரிவு சோதனையின்போது அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் இவா் வாக்களித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலையக் குடியேற்றப் பிரிவு அதிகாரி முகாஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சாமிநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரிசிக் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தவா் மாயம்: போலீஸாா் விசாரணை
திருச்சியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



