திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய நிலைய மேலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் எம். ராமச்சந்திர ராஜு தலைமை வகித்தாா். கோட்ட நிதிச் செயலாளா் ரிச்சா்டு உல்ரிச் முன்னிலை வகித்தாா்.
இதில், ரயில்வேயில் காலியாக உள்ள நிலைய மேலாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடுதல் பணிக்கான கூடுதல் படி வழங்க வேண்டும், இரவுப் பணி படிக்கான உச்சவரம்பை முழுமையாக நீக்க வேண்டும், கூடுதல் பணி நேரத்தை திணிக்கும் இ.ஐ. ரோஸ்டா் முறையைக் கைவிட வேண்டும், தில்லி ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிலைய மேலாளா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் கோட்ட நிா்வாகிகள் மோகன் துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










