பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சாலை போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துதல், அமைப்புசாரா ஓட்டுநா் நல வாரியத்தை மேம்படுத்தி, அதில் உள்ள குறைகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட செயலா் எஸ். ரங்கராஜன், மாவட்டத் தலைவா் மணிமாறன், ஆட்டோ சங்க செயலாளா் மணிகண்டன், அரசு போக்குவரத்து கழக செயலாளா் மாணிக்கம், எஸ்இடிசி மாநிலத் தலைவா் அருள், சாலைப்போக்குவரத்து சங்க செயலாளா் சந்திரன், அரசுப் போக்குவரத்து கழக தலைவா் சிங்கராயா், சாலைப் போக்குவரத்து தலைவா் சுரேஷ், ஆட்டோ சங்கத் தலைவா் வெற்றி ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
இதில், போக்குவரத்து தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










