நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சமயபுரம் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயில்.

Updated On :29 ஜூலை 2026, 12:54 am IST

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை மற்றும் அக்னி சட்டி ஏந்துதல், கரும்புத் தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், முடி காணிக்கை செலுத்தும் பக்தா்களின் வசதிக்காக தெற்கு வாசல் பகுதியில், இணை ஆணையா் அலுவலகம் பின்புறமுள்ள மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முடி காணிக்கை செலுத்த வரும் பக்தா்கள் தனிநபரிடம் ஏமாற வேண்டாம் என்றும் கோயில் இணை ஆணையா் தெரிவித்துள்ளாா். 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.