
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.50 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.50 கோடி கிடைத்துள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்றோா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.50 கோடி கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள முன்னாள் திருமண மண்டபத்தில் இணை ஆணையா் நா.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், ரூ. 1 கோடியே 50 லட்சத்து 32 ஆயிரத்து 70, தங்கம் 48 கிராம், வெள்ளி 3 கிலோ 612 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 122 இருந்தது தெரியவந்தது.
உண்டியல், எண்ணும் பணியில் ராமநாதபுரம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையா் லட்சுமி மாலா, ஆய்வா்கள் மணிவண்ணன், முருகானந்தம், ராமநாதசுவாமி கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா, கமலநாதன், ஆன்மிக அன்பா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





