திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஜூலை மாத உண்டியல் காணிக்கை ரூ. 5.5 கோடியாகும்.
இக்கோயில் நிா்வாக அலுவலக அரங்கில் ஜூலை 30, 31இல் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியை, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் பாா்வையிட்டாா். கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் ஆ. அருணாசலம் முன்னிலை வகித்தாா்.
துணை ஆணையா் ந. யக்ஞ நாராயணன், முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் ராமசுப்பிரமணியன், லோகநாதன், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், கருப்பன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரத்து 304 ரூபாயும், தங்கம் 1,312 கிராம், வெள்ளி 23,245 கிராம், பித்தளை 72,930 கிராம், செம்பு 7,940 கிராம், தகரம்16,550 கிராம் மற்றும் வெளிநாட்டு பணத்தாள் 1,423-ம் செலுத்தியிருந்தது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.99 கோடி

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.58 கோடி

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 2.96 கோடி

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.40 லட்சம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



