
தஞ்சைப் பெரிய கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50. 88 லட்சம்!
தஞ்சைப் பெரிய கோயில் உண்டியல் காணிக்கை பற்றி..

தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள உண்டியல் எண்ணப்பட்ட நிலையில் ரூ.50.88 லட்சம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிததுள்ளது.
உலக புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பெரிய கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி, வராகி அம்மன், கரூரார், சித்தர் விநாயகர், முருகன் சன்னதி என 11 இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உண்டியல் திறக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு எண்ணபட்டது. இதில் பொதுமக்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்து 88 ஆயிரம் கிடைத்துள்ளது. மேலும், 47 கிராம் தங்கம் மற்றும் 194 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் நிர்வாகத்தின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் - தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




