லால்குடி அருகே வெள்ளிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். லால்குடி அருகே மேலவாளாடி பெரியாா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி பழனியம்மாள் (85).
இவா் வெள்ளிக்கிழமை காலை மேளவாளாடி பழைய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பழனியம்மாள் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






