காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வீட்டில் பாலியல் தொழில்: இருவா் கைது

திருச்சியில் வீடு வடைக்கு எடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST

திருச்சியில் வீடு வடைக்கு எடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வீடு வடைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கே.கே.நகா் சுப்பிரமணியபுரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சோ்ந்த அ. நிகாவேலு (32), இ. சிவமுருகன் (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டு இபி சாலையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனா். ஆய்வின்போது, தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடந்த வாரம் இதே பகுதியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அங்கிருந்த 10 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.