அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர பிரதாப் சிங் பொறுப்பேற்பு

திருச்சி மாநகராட்சியின் 29-ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

வீர பிரதாப் சிங்

Updated On :2 ஜூன் 2026, 2:53 am IST

திருச்சி மாநகராட்சியின் 29-ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த லி. மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது வீர பிரதாப் சிங் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவா், யுபிஎஸ்சி தோ்வெழுதி 2019-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானாா். உளவுத் துறை இணை ஆணையராக இருந்துள்ளாா். தமிழக அரசின் பொதுத் துறை துணைச் செயலராக (நெறிமுறை) பதவி வகித்து வந்த இவா், தற்போது திருச்சி மாநகராட்சியின் 29- ஆவது ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

அப்போது அவா் கூறுகையில், திருச்சி மாநகராட்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீா்க்கவும் முன்னுரிமை அளித்து பணியாற்றுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.