மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 2:43 am IST

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 8, 9-ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 7, 8-ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும்.

பகுதியாக ரத்து: திருச்சி - பாலக்காடு ரயிலானது (16843) வரும் 5, 7 -ஆம் தேதிகளில் ஈரோடு - பாலக்காடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பொறியியல் பணிகள் நிறைவடைந்ததும் ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

காலதாமதமாகும் ரயில்கள்: குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) புதன்கிழமை (ஜூன் 3) 45 நிமிஷங்களும், 5, 6, 7, 8-ஆகிய நாள்களில் 25 நிமிஷங்களும், ஜூன் 10-இல் 30 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 6-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 7-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 7-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

தூத்துக்குடி - கச்சிகுடா விரைவு ரயிலானது (17616) வரும் 10- ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 55 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் 9-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயிலானது (56832) வரும் 9-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 25 நிமிஷங்கள் நின்று தாமதமாகச் செல்லும்.

ஜோத்பூா் - மன்னாா்குடி விரைவு ரயிலானது (22673) ஜூன் 3, 6, 10-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் நின்று தாமதமாகச் செல்லும்.

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) ஜூன் 3, 6, 10- ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 20 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.