பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 25, 26, 27, 28, 29, 30-ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவில் - மும்பை எல்டிடி விரைவு ரயிலானது (16352) வரும் 25, 28-ஆம்தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 27-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) வரும் 26-ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 24, 25, 26, 27, 28, 29-ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்...: குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது வரும் 24-ஆம் தேதி 30 நிமிஷங்களும், 25, 26, 27-ஆம் தேதிகளில் 25 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.
தூத்துக்குடி - கச்சிகுடா விரைவு ரயிலானது வரும் 24 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 55 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
நாகா்கோவில் - மும்பை எல்டிடி விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
ஜோத்பூா் - மன்னார்ரகுடி விரைவு ரயிலானது வரும் 24, 27-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்

பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவைகளில் மாற்றம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




