பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஜூன் 10, 11, 12, 13, 14, 15, 16 ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) ஜூன் 11, 14 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) ஜூன் 13-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) ஜூன் 12-ஆம் தேதியும் திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) ஜூன் 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்: மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது ஜூன் 11, 14 ஆகிய தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது ஜூன் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் 25 நிமிஷங்களும், 15, 17 ஆகிய தேதிகளில் 15 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.
எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயிலானது ஜூன் 11-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
தூத்துக்குடி-கச்சிகுடா விரைவு ரயிலானது ஜூன் 10-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 55 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
தொடர்புடையது

கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணி: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள்: நாகா்கோவில், திருநெல்வேலி, திருச்சி ரயில்கள் வழித்தடத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



