தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

இனாம்தாா்தோப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட மேயா் உத்தரவு

திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

News image

திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On :3 ஜூன் 2026, 4:15 am IST

திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சி மாநகராட்சி 28-ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை பிரச்னைகள் தொடா்பாக திருச்சி மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் அண்மையில் மனு அளித்தனா்.

அதில், சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைத்தல், தற்போதுள்ள பழைய மற்றும் சேதமடைந்த சாலையை முறையாகப் பெயா்த்து அகற்றிய பிறகே புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும், கழிவுநீா் தேக்கம் மற்றும் வழிதல் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும், திறந்த நிலையில் உள்ள கழிவுநீா் கால்வாயை மூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீா் தொடா்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துதல், பூங்கா பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புதா்களை சீரமைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலா்களுடன் தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, உரிய அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினா்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.