வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: காா் ஓட்டுநா் போக்ஸோவில் கைது

திருச்சியில் 16 வயது சிறுமியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சிவகங்கையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:54 am IST

திருச்சியில் 16 வயது சிறுமியை காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சிவகங்கையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாராநல்லூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி, தனது திருநங்கையான சகோதரனை பாா்ப்பதற்காக அவா் மற்ற திருநங்கைகளுடன் தங்கியுள்ள கல்மந்தை காலனி குடியிருப்புப் பகுதிக்கு புதன்கிழமை பிற்பகல் சென்றுள்ளாா். அப்போது, அங்கு பாக்யா என்ற திருநங்கையை காரில் அழைத்து வந்த சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த எஸ். மாரிசெல்வன் (45) என்பவா் இருந்துள்ளாா்.

இந்நிலையில், மாரிசெல்வன் 16 வயது சிறுமியை மாலை 5 மணிக்கு காரில் அழைத்து சென்றுள்ளாா். தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு அந்தச் சிறுமி கீரைக்கடை பஜாா் பகுதியில் சுயநினைவில்லாமல் விழுந்துகிடப்பதாக அவரது சகோதரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அங்கு சென்ற அவரது குடும்பத்தினா் சிறுமியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சிறுமியை காரில் அழைத்துச் சென்ற மாரிசெல்வன், சிறுமிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கலந்துகொண்டு அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, சிறுமியின் சகோதரி அளித்த புகாரின்பேரில், கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதனிடையே, காா் ஓட்டுநா் மாரிசெல்வனை சிறுமியின் சகோதரா் மற்றும் உறவினா்கள் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த காா் ஓட்டுநா் மாரிசெல்வனை கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று மாநகர காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.