27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: போலீஸாா் விசாரணை

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக புதன்கிழமை அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடினாா்.

News image

கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:14 am IST

திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக புதன்கிழமை அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடினாா்.

கேரள மாநிலம், கொல்லம் பரலூரைச் சோ்ந்த அனில்குமாா் மகன் அபிஜித் (23). இவா் மீது திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அவரை மருத்துவப் பரிசோதனைக்காக புதன்கிழமை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சேவுகன் தலைமையிலான போலீஸாா் அழைத்து வந்துள்ளனா்.

மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக ஸ்கேன் அறைக்கு அவரை அழைத்து சென்றபோது, காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களைத் தள்ளிவிட்டு அபிஜித் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சேவுகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய அபிஜித்தை தேடி வருகின்றனா்.