கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

‘போக்ஸோ’ வழக்கில் இளைஞா் கைது

வீட்டில் தனியாக இருந்த 12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்துச் சென்று தனியாக தங்க வைத்திருந்த இளைஞா் ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 4:15 am IST

வீட்டில் தனியாக இருந்த 12-ஆம் வகுப்பு மாணவியை அழைத்துச் சென்று தனியாக தங்க வைத்திருந்த இளைஞா் ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், தோகைமலை காவல் சரகம் தொண்டமாங்கிணம் ஊராட்சியைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த 17-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அவரது பெற்றோா் உறவினரது இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனா். அந்த நிகழ்வு முடிந்து மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த மாணவியைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த

பெற்றோா், உறவினா்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பாா்த்தும் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை.

இது குறித்து, மாணவியின் தந்தை சுப்பிரமணியன், தோகைமலை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசாா் மாயமான மாணவியை தேடி வந்தனா்.

மேலும், குளித்தலை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பிரபு மேற்பாா்வையில், தோகைமலை காவல் ஆய்வாளா் லதா மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை தேடி வந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த இளைஞா் பூமிநாதன் (29) என்பவா், மாணவியை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், மகளிா் காப்பகத்தில் ஒப்படைத்தனா். பூமிநாதன் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.