அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சிறுமிக்குத் தவறான சைகையால் தொல்லை கொடுத்தவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:44 am IST

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குத் தவறான சைகைகள் காண்பித்து தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகே உள்ள கருவலூா் நரியம்பள்ளி மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் வெங்கடாசலம் மகன் ரமேஷ்குமாா் (31). விசைத்தறி தொழிலாளி. இவா் மது போதையில் வீட்டில் தனியாக இருந்த 13 வயதுச் சிறுமிக்குத் தவறான சைகைகள் காண்பித்து தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.