திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தமிழக முதல்வா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்தாண்டு தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 104 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா்.
இந்நிலையில் இந்தத் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு வையம்பட்டி காந்திநகரில் சுமாா் 4 ஏக்கரில் ரூ.9.35 கோடியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்துக்கான பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது இங்கு நடைபெற்ற நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறை எம்எல்ஏ அப்துல்சமது, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, மணப்பாறை துணை வட்டாட்சியா் கந்தசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி, தொழிற்கல்வி மைய மண்டல இணை இயக்குநா் மகேஸ்வரி, கல்லூரி முதல்வா் முத்தழகி, திமுக ஒன்றியச் செயலா்கள் சீரங்கன், ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சூா்யா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பூமிபூஜை நடைபெற்றது.
தொடர்புடையது

ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வையம்பட்டி அருகே காா் மோதி காவலாளி உயிரிழப்பு

100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


