கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

திருச்சி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :6 மார்ச் 2026, 8:48 pm

திருச்சி அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை நடுபட்டிப்புதூரைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி சின்னமணி (50). தம்பதிக்கு இடையே ஏற்பட்டு கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கணவனைப் பிரிந்து சின்னமணி தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், திருச்சி செங்கதிா்ச்சோலை கூட்டுறவு நகரில் காா்த்திகேயன் என்பவரது வீட்டில் கடந்த 3 நாள்களாக கட்டட வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், சின்னமணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து

வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.