மணப்பாறையில் வெள்ளிக்கிழமை மீன் ஏற்றி வந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
நாகப்பட்டினத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இறைச்சிகாக சுமாா் ரூ.7 லட்சம் மதிப்பிலான உயா் ரக கடல் மீன்கள், மினி சரக்கு வேன் ஒன்றில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது.
வேனை, சீா்காழியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ராமு (24) ஓட்டி வந்துள்ளாா். வேன், மணப்பாறையை கடந்து திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் நொச்சிமேடு பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது, மணப்பாறை பகுதியிலிருந்து நெடுஞ்சாலைக்குச் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதிவிடமால் வேனை திருப்பிய போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து நிலைதடுமாறிய வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், வேன் ஓட்டுநா் ராமு சிறுகாயங்களுடன் தப்பினாா். இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்தவா்களும் சிறுகாயங்களுடன் தப்பினா். அதைத்தொடா்ந்து மாற்று வேன் ஏற்பாடு செய்யப்பட்டு மீன்கள் கொச்சிக்கு புறப்பட்டது. இதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான மீன்கள் சேதமின்றி தப்பின. விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்
அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


