பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 21 போ், 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.
கேரள மாநிலம், பூவத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் எல்எம்எஸ் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான வேன் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு தமிழக-கேரள எல்லையான பளுகல் அருகே காரக்கோணம் - குந்நத்துகால் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது வேனில் ஸ்டீரிங் ராடு உடைந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியா் 21 போ், பெண் பணியாளா்களான வண்டித்தடத்தைச் சோ்ந்த மினி, மஞ்சவிளாகத்தைச் சோ்ந்த ஜோனிதா ஆகியோா் காயமடைந்தனா்.
அனைவரையும் அப்பகுதியினா் மீட்டு காரக்கோணம், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து பாறசாலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் பலி
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


