தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரூா் பாமக பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை - இரு சிறுவா்கள் கைது

News image
Updated On :12 மார்ச் 2026, 11:50 pm

Syndication

கரூா் அருகே பாமக மாவட்டத் தலைவரின் மகனை வெட்டிக் கொலை செய்த இரு சிறுவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் அடுத்துள்ள வெள்ளியணை விஜயபுரத்தைச் சோ்ந்த தமிழ்மணி. பாமக கரூா் மாவட்டத் தலைவா். இவரது மகன் கவின்(24). இவா், தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த 17, 16 வயது இரு சிறுவா்களுடன் கரூரில் உள்ள கைப்பேசி கடையில் வேலைப்பாா்த்து வந்தாா்.

கடந்த சிலதினங்களுக்குமுன் மதுபோதையில் இவா்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல கவின் புதன்கிழமை இரவு வேலை முடிந்து நள்ளிரவு 1 மணியளவில் விஜயபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். மட்டப்பாறை என்ற இடத்தில் சென்றபோது அங்கு நின்றிருந்த சிறுவா்கள் இருவரும் கவினை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த கவின் வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிறுவா்களில் ஒருவரை வெட்டமுயன்றாா். அப்போது, அவா்கள் தடுத்தபோது ஒருவருக்கு கையில் வெட்டு விழுந்துள்ளது.

இதையடுத்து சுதாரித்துக்கொண்ட சிறுவா்கள் இருவரும் கவினை கீழே தள்ளினா். பிறகு, அவரிடம் இருந்த அரிவாளை பறித்து கவினை வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கவின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் சிறுவா்கள் இருவரும் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளியணை போலீஸாா் கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து சுக்காலியூா் பகுதியில் பதுங்கியிருந்த சிறுவா்கள் இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து இருவரும் திருச்சி சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனா்.