திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனா்.
திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் அமைந்துள்ள கொடிமரத்தில் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்கள். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
அதனை தொடா்ந்து மாலை 6 மணிக்கு முதல் புறப்பாடாக சோமாஸ்கந்தருடன் ஏகசிம்மாசனத்தில் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம. லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

காமாட்சி அம்மன், ஆதிசங்கரா் வீதியுலா

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


