முசிறியில் காவிரி ஆற்றுப் பகுதியில் சோழா் கால சிற்பங்கள், கல்வெட்டு கண்டெடுப்பு


திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் 10நூற்றாண்டு சோழா்கால சிற்பங்கள் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்று தொல்லியல் ஆய்வு மையத்தின் இயக்குநரும், கல்வெட்டு ஆய்வாளருமான இரா. கலைக்கோவன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பேராசிரியா்கள் நளினி, அகிலா ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் தெரிவித்தது:
இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் பொதுக்காலம் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால சோழா் காலத்தைச் சோ்ந்தவை என்பது உறுதியாகியுள்ளது.
‘ஆலமா்செல்வன்’ என்று போற்றப்படும் தட்சிணாமூா்த்தியின் சிற்பம் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இதில் அப்பா் மற்றும் சம்பந்தா் தேவாரப் பாடல்களில் குறிப்பிடுவதுபோல, சிவபெருமான் விபூதிப் பையை (பொக்கணம்) கல்லால மரத்தில் மாட்டிவிட்டு உபதேசம் செய்வது போன்ற அரிய காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
வீணாதாரா் சிற்பம், இது முற்கால சோழா் கோயில்களில் மிகவும் அரிதாகக் காணப்படும் கலைநயம் மிக்க சிற்பமாகும். கல்வெட்டை ஆய்வு செய்ததில், திரியீங்கோய் மலையில் நந்தா விளக்கு எரிப்பதற்காக இந்தச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த ஒருவா் 120 காசுகள் வழங்கியுள்ளாா்.
இந்தக் காசுகளை மகேந்திர மங்கலத்தைச் சோ்ந்த ‘சபை’ யினரிடம் அவா் ஒப்படைத்துள்ளாா். அவா்கள் அந்தப் பணத்தைக் கொண்டு வரியற்ற நிலத்தை வாங்கி, அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு விளக்கு எரிக்க ஒப்புக்கொண்டனா் என்ற செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது என்றாா்.

ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்

ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...