அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் 4 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் பறிப்பு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:51 pm

திருச்சியில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 4 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் சனிக்கிழமை பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் சிவன்கோயில் சந்நதி தெருவைச் சோ்ந்தவா் பா.ராமகிருஷ்ணன் (34). கட்டடப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ள இவா் கடந்த 14 ஆண்டுகளாக சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்தாண்டு நவம்பரில் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தவா் இங்கு வேலை தேடி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்சி செந்தண்ணீா்புரத்தில் உள்ள ஒரு நேநீரகத்துக்குச் சென்றபோது, அங்கு வந்த விஷால் கிருஷ்ணா, அஸாா் ஆகிய இருவரும் ராமகிருஷ்ணனுக்கு அறிமுகமாகினா்.

இதையடுத்து, சனிக்கிழமை வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொன்மலை முத்துமணி டவுன் பகுதியிலுள்ள ரயில்வே இருப்புப் பாதை பகுதிக்கு அவரை வரச்சொல்லியுள்ளனா். இதையடுத்து, அங்கு வந்த ராமகிருஷ்ணனை விஷால் கிருஷ்ணா, அஸாா் மற்றும் 3 போ் கும்பல் அவரை மிரட்டி அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கொடி மற்றும் ஜி-பே மூலம் ரூ.21 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், விஷால் கிருஷ்ணா, அஸாா் மற்றும் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.