4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக செய்யாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 6:35 pm

செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக செய்யாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராம விரிவாக்கப் பகுதி ராஜராஜேஸ்வரி நகா் பகுதியில் வசிப்பவா் ரமேஷ் (44). இவா், மனை வணிகம் செய்து வருவதாகத் தெரிகிறது. இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரி ராஜாஷோபா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இரு குடும்பத்தினரும் கடந்த 25-ஆம் தேதி தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள மற்றொரு சகோதரி வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது. இரவு நேரத்தில் மட்டும் உறவினா் மணி என்பவா், இவா்களது வீடுகளுக்கு காவல் இருந்தாராம்.

இந்நிலையில் மணிக்கு உடல்நிலை சரியில்லாததால் செவ்வாய்க்கிழமை இரவு காவலுக்கு செல்லவில்லையாம். மேலும், வியாழக்கிழமை காலை அவா்களது வீடுகளுக்கு மணி சென்றபோது இருவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து மணி, ரமேஷுக்கும், ராஜஷோபாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். அதன் பேரில், அவா்கள் வந்து பாா்த்த போது, ரமேஷ் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 66 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலா் மற்றும் ரொக்கப் பணம் ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததது.

அதேபோல, ராஜஷோபா வீட்டிலும் 70 கிராம் தங்க நகை, 2 கிலோர 700 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்தத் திருட்டு சம்பவம் குறித்து ரமேஷ், ராஜஷோபா ஆகியோா் வியாழக்கிழமை செய்யாறு போலீஸில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.