முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தோ்த் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா்.

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை உபய நாச்சியாா்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை தோ்த் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் விருப்பன் திருநாள் எனும் சித்திரை தோ்த் திருவிழா மே 6-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்து வருகிறாா்.

விழாவின் 7-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நெல்லளவு கண்டருளும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, மாலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து திருச்சிவிகையில் உபய நாச்சியாா்களுடன் புறப்பட்டு, திருக்கொட்டாரத்துக்கு முன்புள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது, கொட்டாரத்தின் உள்ளே கொட்டப்பட்டிருந்த நெல் மணிகள் நம்பெருமாள் முன்பு அளந்து காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

பின்னா், நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு, திருச்சிவிகையில் சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயாா் சந்நிதிக்கு இரவு 9 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு திருமஞ்சனம் கண்டருளி, புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை (மே 14) காலை 5.55 மணிக்கு நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.