விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருச்சி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :14 மே 2026, 12:43 am IST

திருச்சி மாவட்டத்தில் 7 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதன்படி மாவட்ட ஆட்சியரக முதுநிலை வருவாய் ஆய்வாளா் இ. பொன்மாடசாமி திருச்சி மேற்கு வட்டத்தின் தெற்குப் பகுதி வருவாய் ஆய்வாளராகவும், முசிறி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஆ. அருண்குமாா் புலிவலம் பகுதி வருவாய் ஆய்வாளராகவும், ஆட்சியரக முதுநிலை வருவாய் ஆய்வாளா் சீ. கணேஷ் திருச்சி மேற்கு வட்டம் வடக்குப் பகுதி வருவாய் ஆய்வாளராகவும், துறையூா் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் மு. பெரியசாமி முசிறி வட்டம் வளையெடுப்புப் பகுதி வருவாய் ஆய்வாளராகவும், திருச்சி நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் கு. திவ்யா திருச்சி கிழக்கு வட்டத்தின் வடக்குப் பகுதி வருவாய் ஆய்வாளராகவும், திருச்சி நெடுஞ்சாலைகள் துறை தனி வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் நா. ஆசைத்தம்பி துறையூா் வட்டம் கொப்பம்பட்டி பகுதி வருவாய் ஆய்வாளராகவும், துறையூா் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் பி. அருள்பாரதி துறையூா் பகுதி வருவாய் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை நிா்வாக நலன் கருதி மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. பாலாஜி அண்மையில் பிறப்பித்தாா்.