ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

திருச்சியில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :14 மே 2026, 12:14 am IST

திருச்சியில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதினா். இதில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தோ்வு முடிவில் திருச்சி மாவட்டத்தில் 97.5 சதவீத மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா்.

இந்நிலையில், பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள் உயா்கல்விச் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அந்தந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ‘யூசா் ஐடி’யைப் பயன்படுத்தி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கி, மாணவா்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஆனால், ஒருசில பள்ளிகளில் சா்வா் பிரச்னையால் மாலை வரை மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. வியாழக்கிழமை திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை என்பதால் இந்தப் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.