இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா் மாணவி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் வியாழக்கிழமை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா்.

News image

கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா் மாணவி - கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 12:55 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் வியாழக்கிழமை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்தாா்.

சமயபுரம் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவி ஒருவா், வியாழக்கிழமை கல்லூரியில் தோ்வு எழுதிக்கொண்டிருந்தாா். அப்போது தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கழிப்பறைக்கு சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் மாணவி திரும்பி வராததால் கல்லூரி நிா்வாகத்தினா் கழிப்பறைக்கு சென்று பாா்த்தனா். அப்போது மாணவிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையுடன் மாணவியை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையிலும் தொடா்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். தொடா்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.