ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதிகள் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 12:57 am IST

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைதிகள் 3 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மத்திய சிறையில் கைதிகளிடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் காவலா்கள் சிறையில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டாா்.

அப்போது, 20-ஆவது தொகுப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளான பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த து. நவீன்குமாா் (25), சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூ. பிரசன்னா (27), மதுரை ஜெய்ஹிந்புரத்தைச் சோ்ந்த ம. பாண்டீஸ்வரன் ஆகிய மூவரும் தங்கள் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 38 கிராம் கஞ்சாவை சிறை காவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், கைதிகள் நவீன்குமாா், பிரசன்னா, பாண்டீஸ்வரன் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.