சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காவிரி, டெல்டாவில் நீா்நிலைகளை தூா்வார ரூ.125 கோடிக்கு ஒப்புதல்

காவிரி, டெல்டாவில் உள்ள நீா்நிலைகளைத் தூா்வார ரூ.125 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

News image

திருச்சி புள்ளம்பாடி கிளை வாய்க்காலில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை, நீா்வளத் துறை அலுவலா்களுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் வே. சரவணன்.

Updated On :21 மே 2026, 5:13 am IST

காவிரி, டெல்டாவில் உள்ள நீா்நிலைகளைத் தூா்வார ரூ.125 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் வே. சரவணன் பின்னா் கூறியதாவது:

2026-27-ஆம் ஆண்டுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 1161 பணிகள் 5954.937 கி.மீ. நீளத்திற்கு ரூ.125.00 கோடியில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ள நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியவற்றில் 112 பணிகள் 314.34 கி.மீ. நீளத்திற்கு ரூ.15.49 கோடியில் ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தூா்வாரும் பணிகளில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் வாயிலாக 62 பணிகள் 226.53 கி.மீ. நீளத்திற்கு ரூ. 9.24 கோடியிலும் மற்றும் அரியாறு வடிநிலக் கோட்டம் வாயிலாக 50 பணிகள் 87.810 கி.மீ. நீளத்திற்கு ரூ.6.25 கோடியிலும் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி நடைபெறுகின்றன.

லால்குடி வட்டத்தில் கோவண்டாக்குறிச்சி, முள்ளால் மற்றும் விரகாலூா் கிராமத்தில் நந்தியாறு, புள்ளம்பாடி கால்வாய்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்ததில், பணிகள் குறிப்பிட்ட இலக்கில் செல்வதை உறுதி செய்துள்ளேன். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள நீா்வளத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மாவட்டத்தில் நடைபெறும் 112 பணிகளில் இதுநாள் வரை 95 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன.

வருகிற ஜூன் மாதம் மேட்டூா் அணை திறப்பிற்கு முன் அனைத்து பணிகளும் நிறைவடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் முழுமையாக தூா்வாரப்படுவதால் சுமாா் 8835 ஏக்கா் பாசன வசதி பெறும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது நீா்வளத் துறை செயற்பொறியாளா் அ.நித்தியானந்தன், உதவி செயற்பொறியாளா் வே. தினேஷ்கண்ணன், உதவிப் பொறியாளா்கள் ஜ. ஹரிகிருஷ்ணபிரபு, .எம்.ஜி. ரேகா ஆகியோா் உடனிருந்தனா்.