துறையூா் அருகே வடக்குவெளியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வருவாய், மோட்டாா் வாகன, காவல், தீயணைப்பு, சுகாதாரத் துறை அலுவலா்கள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தன.
முசிறி கோட்ட சாா் -ஆட்சியா் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் துறையூா் பகுதியிலுள்ள 19 பள்ளிகளுக்கு சொந்தமான 85 வாகனங்களில் தரம் குறித்தும் அவசர வெளியேறும் வழி இடையூறின்றி உள்ளதா, சிசிடிவி, தீத் தடுப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.
இதில் ஸ்ரீரங்கம் போக்குவரத்து மோட்டாா் வாகன அலுவலா் சுரேஷ்பாபு, துறையூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் சதாசிவம், மாவட்டக் கல்வி அலுவலா் அண்ணாதுரை, முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், துறையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜதுரை துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பள்ளி வாகனங்களின் ஊழியா்கள் மது அருந்தவோ, கைப்பேசி பயன்படுத்தவோ கூடாது என்றும், திடீா் தீத் தடுப்பு முறைகள், ஆபத்து கால முதலுதவி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் சோதனை: 12 வாகனங்கள் பறிமுதல்

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 32 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

அரக்கோணத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தனியாா் பள்ளிப் பேருந்துகள் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



